ராமர் வழிபட்ட திருவாரூர் தியாகராஜர் தலம் : புராண நிகழ்வுகள்..
Aug 31, 2023, 00:10 IST
By

பிள்ளைப்பேறு இல்லாத தசரதன் பல தலங்களையும் தரிசித்து வழிபட்டு, தெற்கு நோக்கி வந்தான். ஆவூர்ப் பசுபதீஸ்வரம் முதலிய தலங்களை வழிபட்ட பின்னர் திருவாரூரை அடைந்தான்.
ஆரூர் நாயகனை வழிபட்ட பின் லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான். தந்தையாகவும் தாயாகவும் சேயாகவும் திகழும் தியாகராஜப் பெருமானின் திருவருளால் திருமாலை மகனாக அடையும்பேறு பெற்றான்.
ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் என்ற நான்கு புதல்வர்களுக்குத் தந்தையானான்.
தசரதன் மட்டுமன்று அவன் தந்தையான அஜன், தசரதன் மகன் ராமன், அவனுடைய புதல்வர்கள் லவன் குசன் எனத் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து ரகு வம்சத்தினர் திருவாரூர் பெருமானை பூஜித்து லிங்க பிரதிட்டை செய்து வழிபட்டு நலம் அடைந்துள்ளனர். இவர்கள் பூஜித்த லிங்கங்கள் உட்பிரகாரத்தில் உள்ளன.