திருவோணம் திருவிழா : இதில், தமிழர் பண்பு என்ன?
 

By 
Thiruvonam Festival In which, what is the characteristic of Tamils

கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான திருவோணம் திருவிழா, வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 

கேரளாவை ஆண்ட மாவேலி மன்னன், மக்களைப் பார்க்க வரும் நாளே ஓணப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 

இந்த நாட்களில், மக்கள் வீடுகள் முன்பு, அத்தப்பூ கோலமிட்டு, மன்னனை வரவேற்பார்கள்.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழா, நேற்று முதல் தொடங்கியது. 
அதன்படி, அஸ்தம் திருவிழா நேற்று ஆராதனையுடன் நடந்தது.

ஓணம் பண்டிகையையொட்டி, மக்கள் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலம் இடுவார்கள். 

இந்த நாட்களில், மக்கள் பொதுஇடங்களில் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால், ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை.
இந்த ஆண்டும் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. 

ஆனாலும், இம்முறை மாநில அரசு கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து இருப்பதால், மக்கள் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை கட்டுப்பாடுகளுடன் தொடங்கி உள்ளனர்.

பொருளாதார நிலையில், சில தமிழரும் கேரளாவில், சொந்த பந்தமென வாழ்க்கைச் சூழலில் கலந்துவிட்டதால் அல்ல, 

என்றும்
யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்பதே, இறையுணர்வுக்கு சமமான தமிழர் பண்பு.!

Share this story