சனி திசை நடப்பில் இருப்பவர்கள், சுபயோகம் பெற பரிகாரம்.!

By 
Those who are in the direction of Saturn, the remedy to get the benefit.!

புரட்டாசி மாதம் வளர்பிறையில் வரும் 10 நாட்கள் மிகவும் விசேஷம். 

அதைத் தான் நவராத்திரி என்றும் தசரா என்றும் கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் சூரியன், கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். கன்னி ராசி என்பது புதனின் வீடாகும். இங்கு, புதன் உச்சபலம் பெறுகிறார். புதன் கிரகம் விஷ்ணுவின் அம்சமாகும். 

ஆகையால்தான், புரட்டாசி மாதம் பிறந்தவுடன் பெருமாளுக்குரிய விழாக்கள், பிரம்மோற்சவங்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. பெருமாளுக்கு புதன், சனி இரண்டும் விசேஷ தினங்களாகும்.

விரதம் :

புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் சனிக்கிழமை விரதம், சர்வ மங்களங்களையும் அருளும். 

அதுவும், மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு அதி சிறப்பானது. 

இந்த மாதத்தில் செய்யும் தானதர்மம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. 

புண்ணியம் :

சனிக்கிழமை அன்று இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்கள், தொழுநோயாளிகள், பாரம் சுமப்பவர்கள், முதியோர்கள் போன்றவர்களுக்கு உணவு, உடை வழங்குவது சிறந்த புண்ணியமாக சொல்லப்படுகிறது. 

சனி திசை நடப்பில் இருப்பவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என்று சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்தால், தடைகள் நீங்கும். சுபயோக சுபயோகம் கூடிவரும்.

Share this story