திருப்பரங்குன்றம் கோவிலில், 8-ந் தேதி திருக்கல்யாண விழா..

kunram

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா அடுத்த மாதம் 8-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்கிறார்கள்.

அங்கு திருக்கல்யாணம் முடிந்து இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைவர். எனவே அன்றைய தினம் காலை 4 மணி முதல் இரவு சுவாமி கோவிலை வந்தடையும் வரை கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

மேலும் பக்தர்கள் ஆடி வீதிகள் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தை காண வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this story