திருப்பதி கோவில் தரிசனம் : 13-ந்தேதி ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியீடு

By 
tirupati10

* திருப்பதி ஏழுமலையானை வருகிற 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை தரிசிப்பதற்காக ரூ.300 டிக்கெட்டுகள் 13-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. 

இதைப் பக்தர்கள் கவனத்தில் கொண்டு, ஆன்லைனில் ரூ.300 டிக்கெட் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்யலாம். மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

* காட்பாடி காந்திநகரில் ஆதிலட்சுமி தெய்வசிகாமணி திருமண மண்டபம் உள்ளது. இங்கு 8.2 அடி உயரத்தில் 5 அடி அகலத்தில் ஒரே அத்திமரத்தால் வெங்கடேச பெருமாள் சிலை புதிதாக செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையில் தசாவதாரங்கள் பதிய பெற்றுள்ளது. 

இந்த வெங்கடேச பெருமாள் சிலைக்கு கும்பாபிஷேக ஆராதனை வைபவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15 மணியில் இருந்து 10.15 மணிக்குள் நடக்கிறது. அதைத் தொடர்ந்து சாமிக்கு திருக்கல்யாண வைபவமும், பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Share this story