வைகாசி வழிபாடுகள் : ஏகாதசியும், பிரதோஷமும்..
 

By 
வைகாசி வழிபாடுகள் : ஏகாதசியும், பிரதோஷமும்..

(22.5.2021) மோகினி ஏகாதசி :

வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி ‘மோகினி ஏகாதசி’ என்று போற்றப்படுகிறது. பகவான் விஷ்ணு வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின்போதுதான், மோகினி அவதாரம் எடுத்தார் என்கின்றன புராணங்கள். அதனால்தான், இதற்கு `மோகினி ஏகாதசி' என்ற பெயர் வந்தது. 

இந்நன்னாளில், விரதமிருந்து பெருமாளை வழிபட்டால், இந்தப் பிறவியின் வினைகள் மட்டும் அல்லாமல் முந்தைய பிறவியின் வினைகளும் சேர்ந்து அழியும் என்பது ஐதீகம். மறுநாள் துவாதசி அன்று பாரணை முடிக்க வேண்டும்.

(24.5.2021 - 7.6.2021) சோமவார பிரதோஷம் :

‘சோமவாரம்’ எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த தினம். அன்றைய நாளில் வரும் பிரதோஷம் மிக விசேஷம். சோமவார பிரதோஷத்தில் ஈசனை வணங்கினால், நம்முடைய தோஷங்கள் நீங்கும், சோதனைகள் விலகும் என்பது நம்பிக்கை. 

எனவே இந்த நாளில், நாள் முழுவதும் விரதமிருந்து சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, மாலையில் மீண்டும் நீராடி, சிவபுராணம் பாராயணம் செய்து சிவபெருமான் படத்துக்கு புஸ்பங்கள் சாத்தி வழிபாடு செய்தால், நன்மைகள் கூடும் என்பது நம்பிக்கை.

Share this story