வைகாசி வழிபாடுகள் : சங்கர ஜெயந்தியும், வாசவி ஜெயந்தியும்..

By 
வைகாசி வழிபாடுகள் : சங்கர ஜெயந்தியும், வாசவி ஜெயந்தியும்..

17.5.2021 சங்கர ஜெயந்தி :

வைகாசி மாத சுக்லபட்ச பஞ்சமி திதியே ஆதி சங்கரரின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆதி சங்கரர், சிவபெருமானின் அவதாரமே என்றும் சொல்வார்கள். 

பாரத தேசம் முழுமையும் பயணித்து அத்வைதம் என்னும் சித்தாந்தத்தைப் பரப்பியவர். ஷண் மார்க்கங்களையும் இணைத்து முறைப்படுத்தியவர். ஆதி சங்கரரின் அவதார தினத்தில், குருவழிபாடு செய்வது மிகவும் முக்கியமானது. இந்த நாளில் நம் வீட்டில் நம் மனதைக் கவர்ந்த மகானின் திருவுருவப் படத்துக்கு மாலை சாத்தி, அவருக்குரிய துதிகளைச் சொல்லி வணங்குவது மிகவும் நல்ல பலன்களைத் தரும்.

21.5.2021 வாசவி ஜெயந்தி :

அன்னை கன்னிகா பரமேஸ்வரி தேவியின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. வணிகர் குலம், தம் குலதெய்வமாகக் கொண்டாடும் அன்னை கன்னிகா பரமேஸ்வரியை, இந்த நாளில் மனதில் நினைத்து வழிபடுவது வாழ்வில் உண்டாகும் துன்பங்களைத் தீர்த்து நல்லருள் தரும். 

அன்னை கன்னிகா பரமேஸ்வரி ஆதி பரமேஸ்வரியின் அம்சங்களில் ஒருவர். எனவே, இந்த நாளில் ஏதேனும் அம்மன் படத்துக்கு மலர்சாத்தி கன்னிகா பரமேஸ்வரி அம்மனை நினைத்து வணங்கினால், குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்கும் என்பது நம்பிக்கை

Share this story