செல்வம் பெருக்கும் காயத்ரி மந்திரம்.!

By 
Wealth Growing Gayatri Mantra.!

காயத்ரி மந்திரம் குரு மந்திரம், மகாமந்திரம் என்று போற்றப்படுவது.  ராஜரிஷி விசுவாமித்திரரால் வழங்கப்பட்ட இது,  மந்திரங்களின் தாய் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. 

கீதையில், கிருஷ்ண பரமாத்மா 'மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரம்' என்றே குறிப்பிட்டுள்ளார். மனிதகுலம் முழுமைக்கும் சொந்தமான இந்த மந்திரம் சக்தியைக் குறித்து வியந்து பாடப்பட்டது. 

ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தின் பாடலாக உள்ள இந்த மந்திரம் சாவித்ரி மந்திரம் என்றும் கூறப்படுகிறது. இந்த மந்திரத்தின் பெருமையால், பிறகு ஒவ்வொரு கடவுளருக்கும் தனித்தனியே காயத்ரி மந்திரம் உருவாகத் தொடங்கியது. 

'ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்'

பூர், புவ, ஸுவ எனும் மூன்று லோகங்களையும் படைத்த ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரிய சக்தியை  தியானிக்கிறோம். 

மேலான, உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை மேம்படுத்தட்டும் என்ற பொருளைக் கொண்டது இந்த மந்திரம். 

இதை ஜெபிப்பவர்கள், அதிகமான பிராணசக்தியைப் பெற்று ஆயுள் விருத்தி அடைவர் என்கிறது வேதம். இதைச் சொல்வது மட்டுமல்ல, கேட்பதும் அநேக பலன்களைத் தரும், செல்வமும் பெருகும் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள்.

Share this story