'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்பதன் விளக்கம் என்ன?
 

By 
What is the meaning of 'Mother, Father, Guru, Deity'

மாதா, பிதா, குரு, தெய்வம் நால்வரில், முதல் மூன்று பிரிவினரும் ஜீவன்களாவர். நான்காவதாக இருக்கும் இறைவன், எல்லாரிலும் உயர்ந்தவராவார். 

எனவே, இந்த வரிசையானது, மாதாவைக் காட்டிலும் பிதா உயர்ந்தவர், பிதாவைக் காட்டிலும் குரு உயர்ந்தவர், குருவைக் காட்டிலும் கடவுள் உயர்ந்தவர் என்ற பொருளில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். 

அதாவது, இந்தவரிசை ஏறுமுகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, இறங்குமுகமாக அல்ல.

தாயின் பணி தந்தையைச் சுட்டிக்காட்டுதல், தந்தையின் பணி குருவைச் சுட்டிக்காட்டுதல்,
குருவின் பணி தெய்வத்தைச் சுட்டிக்காட்டுதல் என்ற பொருளிலும் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு தாயின் கடமை குழந்தையைப் பெற்றெடுத்து, அக்குழந்தையின் சீரிய வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு, அவனை தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்து தந்தையிடம் அக்குழந்தையை ஒப்படைப்பதாகும்.

அதுபோலவே,
தந்தையானவர், தனது மகனுக்கு போதிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்து, காலப்போக்கில் ஒரு திறன்வாய்ந்த குருவிடம் தனது மகனை ஒப்படைக்கின்றார். 

அந்த குருவானவர், ஆன்மீக ஞானத்தின் வாயிலாக தெய்வத்தைஅடைவதற்கான பாதையை தனது சீடனுக்கு அறிவுறுத்துகிறார்.

இதுவே மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதன் உண்மையான விளக்கமாகும்.

Share this story