வீரம்-விவேகம் என்றால் என்ன?

What is Veeram and Vivegam

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் நாட்டு மாவீரன் நெப்போலியன், கடைசிக் காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். 

தோல்வி அடைந்த நெப்போலியனை, பிரிட்டிஷ் ராணுவம் அவரைச் சிறை பிடித்து, ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. 

சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசிக் காலம் கழிந்தது.

குறிப்புகள் :

அவரைப் பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர், அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து,

 'இது உங்களின் சிந்தனையைச் செயல்பட வைக்கும் தனிமையைப் போக்கும்' என்று கூறி அவரிடம் கொடுத்தார்.

ஆனால், சிறைப்படுத்தி விட்டார்களே, என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு, சிந்தனை செயல்படாமல், அதன் மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில், இறந்தும் போனார்.

விழிமின் :

பிற்காலத்தில்.. பிரான்ஸ் அருங்காட்சியகம், மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட, அதை ஆய்வு செய்த போது, அந்த அட்டையின் நடுப் பக்கத்தில், சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. 

அதில், அந்தச் சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை, அந்தக் குறிப்பு சொல்லியிருந்தது.

ஆனால், அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து, அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.

ஆக, அதைப்போல், உறுதியான சிமெண்ட் தரையையும், மரப் பெட்டியையும், தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி,

அதே மரத்தால் செய்யப்பட்ட  எலிப்பொறியில் சிக்கிக் கொண்டால், அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும், அந்த எலிப்பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு, அந்தப் பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னாலும் பின்னாலும் பதட்டத்துடன் சென்று, சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்.

சாதனை படைத்த மாவீரனுக்கும் சரி, சாதாரண எலிக்கும் சரி,

பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து, முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது. 

இந்த எதார்த்த வாழ்வியலின் நெருக்கடியில்தான், மனித குலத்திற்கு மிகுந்த விழிப்புணர்வு மிகவும் அவசியமாகிறது.

வாழ்வோம்; வாழ்விப்போம்.!

Share this story