மக்களின் மன்னன் யார்.?

By 
மக்களின் மன்னன் யார்.?

தமிழ் இலக்கியங்கள் அறம் சார்ந்த செறிவுள்ளது. ஆன்மீகம் எனும் ஆத்மார்த்த அன்பியல் மொழிவது.இவ்வகையில், மன்னனும் மக்களும் வேறல்ல. சாமான்யனும் மன்னனே. மன்னனும் சாமான்யனே. 

உலகில், மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் தலைமை,யார்.? எதனால்.? எனஅன்றே பதிவிட்டு விட்டார், புறநானூற்றில் நம் அவ்வை பாட்டியார்.!அது குறித்து பார்ப்போம். வாங்க..

பாடல் :

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு,நீர்த்துறை படியும் பெருங்களிறு போஇனியை பெரும, எமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல,என்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே.'

விளக்கம் :

'நீர்த் துறைக்குள் இருக்கின்ற யானையானது, ஊர்ந்து சென்று தனது கொம்புகளைக் கழுவும்.அதுபோல, மக்களின் மனங்களில் அடங்கி ஆள்கிறான் செங்கோல் மன்னன்.இத்தகு மன்னனால், என் போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் கூட இனிமை தருபவன் ஆகின்றான்.அதே நேரத்தில், பகைவர் நெருங்கினால், மதநீர் போல, மிகவும் வலிமையானவன்
அறநெறி தவறாத எங்கள் மாமன்னன்.'

   -- புறநானூறு ;
      திணை : வாகை,
      துறை : அரச வகை,
      பாடல் : 94,    
      பாடப்பட்டோன் : மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி, 
பாடியவர் : அவ்வையார்
*

Share this story