வெள்ளி, செவ்வாய் ஜோதி வழிபாடு ஏன்?

By 
Why Friday and Tuesday torch worship

வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில், தெய்வ சன்னிதியில் விளக்கேற்றி வழிபட்டால் கலக்கம் அகலும். காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

திருவிளக்கு பூஜை நடைபெறும் பொழுது, பஞ்சமுக விளக்கேற்றி வைத்து, அந்த விளக்கிற்கே தீபம் காட்டச் சொல்லி வழிபாடு செய்வார்கள். ஜோதிக்கே ஜோதி வழிபாடு என்பதை நாம் உணர முடியும்.

இருளை அகற்றி ஒளியைக் கொடுப்பது விளக்கு ஆகும். இருள்மயமான சூழ்நிலையை மாற்றி, ஒளிமயமான வாழ்விற்கு உத்திரவாதம் தருவது, இந்த ஜோதி வழிபாடுதான். 

அதனால் தான், வள்ளலார் என்று அனைவராலும் அறியப்படும் ராமலிங்க சுவாமிகள், அணையா விளக்கு என்று வடலூரில் ஏற்றி வழிபட்டார்.

ஆலயங்களில் கூட சிவனுக்குப் பின்னால் பிம்ம விளக்கு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். 

வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில், தெய்வ சன்னிதியில் விளக்கேற்றி வழிபட்டால் கலக்கம் அகலும். காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

Share this story