ஜெயிப்பது நிஜம் : ஜென் தத்துவம்

By 
 Winning is real Zen philosophy

ஜென் தத்துவம் 12-ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமாக தொடங்கியது. இது புத்த மதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு முக்கிய தத்துவமாக உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

டொஜென் ஜென்ஜி என்ற ஜப்பானிய தத்துவவியலாளர் தான் இதை வடிவமைத்தார். 

முதன்முதலில் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தான் இது மிகவும் பிரபலமானது. 

மாற்றத்தை எதிர்கொள்க :

நம் உடல், நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமென்றால், அதற்கு நம் மனம் தயாராக இருத்தல் வேண்டும். 

சுருக்கமாக சொல்லப் போனால், மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணையப் பட்டுள்ளது. 

ஒன்றைத் தவிர்த்து இன்னொன்றை நம்மால் சிறப்பாக செயலாற்ற முடியாது என ஜென் தத்துவம் கூறுகிறது. 

நிரம்பிய குடம் போல நிறைவாக இருக்க வேண்டுமென்றால், அதுவும் நம் கையில் தான் உள்ளது. மாற்றத்தை எதிர் கொள்ளக் கற்றுக் கொண்டாலே, இதை மிக சுலபமாக நம்மால் அடைந்து விட முடியும் என ஜென் தத்துவம் விளக்குகிறது.

நான் அடிமை இல்லை :

மனித உடலை ஆட்டிப் படைக்கக் கூடிய திறன் ஹார்மோன்களுக்கு உள்ளது. ஹார்மோன்கள் தான் நமது மனநிலை மற்றும் உடல் நிலையை நிர்ணயிக்கும் முக்கியமான ஒன்றாகும். 

ஆற்றலுடன் செயல்பட ஹார்மோன்கள் சீரான அளவு இருக்க வேண்டும். இன்று, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும், அன்றே ஜென் தத்துவத்தில் கூறியுள்ளனர். 

அதாவது, நாம் ஒரு விஷயத்திற்கு முழுவதுமாக அடிமையாகி விட்டோம் என்றால், அதை நிச்சயம் தவிர்த்து விட வேண்டும். 

உதாரணத்திற்கு ஸ்மார்ட் போன், தொலைக்காட்சி சீரியல், புகைப் பழக்கம், மதுப் பழக்கம் போன்றவற்றை கூறலாம். 

உணவே மருந்து :

நிம்மதியான வாழ்வை அடைய, ஆரோக்கியம் மிக முக்கியமானதாகும். 
அதற்கு உணவு இன்றியமையாத ஒன்றாகும். 3 வேளையும் ஆரோக்கியமான சத்தான உணவை சாப்பிட்டு வந்தால், சிறப்பான வாழ்வை அடையலாம். 

பசியுடன் இருப்பதை தவிர்த்து விடுங்கள் என ஜென் தத்துவம் கூறுகிறது.

ஜென் தத்துவத்தின்படி, தனிமை நிலை சிறந்ததுதான். என்றாலும், அது நாம் கையாளும் முறையில் தான் உள்ளது. 

தனிமையை எண்ணி மன அழுத்தத்தை அதிகரித்து கொண்டால், நிச்சயம் நம் உடலும் மனமும் பலவீனமாக மாறும். தனிமை நிலையைக் கையாள தெரியவில்லை என்றால், அது நமக்கே ஆபத்தாக மாறிவிடும். 

பலமே வாழ்வு :

திடமான எண்ணங்களை உருவாக்குவதற்கு உடற்பயிற்சி அவசியம். அன்றாடம் ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை தவறாது செய்து வந்தால், மனமும் உடலும் ஆரோக்கியம் பெறும். 

மேலும், சின்னச் சின்ன விளையாட்டுகளை கற்றுக்கொண்டால் அது உங்களுக்கு அதிக பலத்தை தரக்கூடும். 

ஜென் தத்துவத்தை கடைப்பிடிப்போர், நீண்ட ஆயுளுடன் இருப்பதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கு சீனர்களும், ஜப்பானியர்களுமே சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.

உப்பு, கொழுப்புச்சத்து ஆகியவை அதிகம் கொண்ட உணவுகளை தவிர்த்து வந்தாலே, ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தானாகத் தேடி வரும்.

Share this story