மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள், எல்லாம் வசப்படும் : வள்ளலார் மொழி

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை, “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற சொல்லுக்கு சொந்தக்காரரான வள்ளலார் என்கிற இராமலிங்க அடிகளார் அவர்கள், அக்டோபர் 15 1823-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலுள்ள, மருதூரில் இராமையா பிள்ளை- சின்னம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
இவர் மக்களின் மிகவும் வருத்தப்படக்கூடிய துயரங்களில் ஒன்றான பசியை போக்கிட 1867-ம் ஆண்டு வண்டலூரில் தர்மசாலை ஒன்றின் ஆரம்பித்து அனைவருக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்தார். இன்றளவும் இவரது பெயரால் லட்சக்கணக்கான மக்களின் பசியை போக்கி உணவழித்து வருகிறார்கள்.
இவரது கொள்கையை பின்பற்றுபவர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் அருளிய பொன்மொழிகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வள்ளலாரின் பொன்மொழிகள்:
தானம் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தாதே.
வெயிலுக்கு ஒதுங்கும் மரத்தை வெட்டாதே.
மனதை அடக்க முயன்றால் அடங்காது. அதனை அரிய முயன்றால் தான் அடங்கும்.
தவறு செய்வதும் இந்த மனம் தான். இனி தவறே செய்யக்கூடாது என தீர்மானிப்பதும் இந்த மனம் தான்.
பிறருடைய பசியை மட்டும் போக்குவதோடு, ஒருவனுடைய ஒழுக்கமும் கடைமையும் முடிந்து விடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன் வர வேண்டும்.
நட்புக்கு துரோகம் செய்யாதே. தாய் தந்தை சொல்லை புறந்தள்ளாதே.
உடலை வருத்தி விரதம் இருப்பதை விட, யாரையும் துன்புறுத்தாமல் இருப்பதே சிறந்தது.
மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் அடிப்படை காரணம் அவர்களின் ஆசை.
உண்மையை மட்டும் பேசுங்கள். அது உங்கள் மேல் உள்ள மரியாதையை பாதுகாக்கும்.
ஏழைகளை ஏமாற்றி, அவர்களின் மனம் வலிக்கும்படி எதுவும் செய்யாதே.
கடவுளிடம் சரணடைந்தால் மட்டுமே நம்மிடம் இருக்கும் பொய் மற்றும் பொறாமை போன்ற தீய பண்புகள் நம்மை விட்டு நீங்கும்.
உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக இருப்பவர்களின் உறவை நாட வேண்டாம்.
உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக, பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
பசித்தவர்களுக்கு பாகுபாடின்றி உணவளிக்க வேண்டும்.
நல்லவர்கள் மனதை கலங்க செய்யாதே.!
வாக்கு வேறு.. மனம் வேறு.. செயல் வேறு.. என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.