சித்திரையில் முத்திரை பதித்த வழிபாடுகள்..

By 
சித்திரையில் முத்திரை பதித்த வழிபாடுகள்..

சித்திரையில் முத்திரை பதித்த வழிபாடுகளில் பைரவர் விரதம், சித்திரை திருவிழா, மற்றும் சித்ரா பவுர்ணமி பற்றி இங்கே சுருக்கமாகக் காண்போம்.

பைரவர் விரதம் : சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரம் அன்று, பைரவ விரதம் பின்பற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் விரதமுறையை கடைப்பிடிக்க வேண்டும். அன்றைக்கு திருமுறை ஓதுதல் வழக்கத்தில் உள்ளது. இவ்விரத முறையை பின்பற்றினால், சுபிட்சமான வாழ்வுடன் இறுதியில் முக்தி கிடைக்கும்.

சித்திரை திருவிழா : ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசையை அடுத்த இரண்டாம் நாள் முதல் பன்னிரண்டு நாட்கள், மதுரையில் ‘சித்திரை திருவிழா’ நடைபெறுகிறது. இவ்விழாவில் மீனாட்சி கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குதல் என இரு முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவ்விழாவினைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருகை தருவார்கள். 

பத்தாம் நாள் திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணமும், 11-ம் நாள் தேரோட்டமும் நடைபெறும். சித்ரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில், அழகர் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. 

ஆனால், தற்போது கொரோனா பரவல் காரணமாக, கோயில் வளாகத்திற்குள் மட்டும், பத்தர்களுக்கு அனுமதியின்றி விழா நடைபெறுகிறது.

சித்ரா பவுர்ணமி : சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி ‘சித்ரா பவுர்ணமி’ என்ற பெயரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில்தான், நம்முடைய பாவ – புண்ணிய கணக்குகளை நிர்ணயம் செய்பவரும், எமதர்மனின் உதவியாளருமான சித்திரகுப்தனுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமான், அம்பிகை வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 

இவ்விழாவன்று மக்கள் பொங்கல் வைத்தும், அன்னதானம் செய்தும் வழிபடுவார்கள். ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் மக்கள்கூடி நிலவொளியில் அமர்ந்து ‘சித்ரான்னம் என்று சொல்லக்கூடிய, பலவகையான கலவை சாத வகைகளை உண்டு மகிழ்வார்கள்.

Share this story