ஒரே நாளில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்..! முழு விவரம்..

By 
tirupati1

திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் திருப்பதிக்கு நாளொன்றுக்கு 400 பேர் சுற்றுலா செல்லலாம். இதற்காக தினமும் திருப்பதி சுற்றுலா பேருந்து அதிகாலை 4.30 மணிக்கு இயக்கப்படுகிறது. 

திருப்பதி செல்ல தற்போது ரூ 300 டிக்கெட் கிடைப்பதே சிக்கலாக உள்ளது. ஒரு நொடி பொழுதில் டிக்கெட் விற்றுத் . சரி தர்ம தரிசனத்திற்கு செல்லலாம் என்றால் அதற்கு டிக்கெட்! நடைபாதை வழியாக செல்லலாம் என்றால் அங்கு காளி கோபுரத்தில் டிக்கெட் கிடைக்குமா என்ற சந்தேகம், எல்லாவற்றையும் விட சிறுத்தை பயம் வேறு.! 

இதனால் ஆண்டுதோறும் கட்டாயம் செல்வோரில் பெரும்பாலானோர் திருப்பதி செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனாலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் இருப்பது வேறு விஷயம். இந்த நிலையில் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாக தமிழ்நாடு சுற்றுலா கழகம் ஒரு தகவலை தெரிவித்துள்ளது. 

அதாவது, சென்னையிலிருந்து திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தில் நாளொன்றுக்கு 400 பேர் வரை செல்லலாம். சென்னை சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் இருந்து திருப்பதிக்கு தினமும் அதிகாலை 4.30 மணிக்கு பேருந்து செல்லும். விருப்பமுள்ளவர்கள் www.ttdconline.com என்ற இணையதளத்தில் பயண திட்டங்களுக்கு முன்பதிவு செய்யலாம்.

சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்யலாம். திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன டிக்கெட்டில் தரிசிக்கலாம். அன்று ஒரே நாளில் அதாவது இரவு 8 மணி முதல் 10 மணிக்குள் வீட்டிற்கு வந்துவிடலாம். 

இதற்காக ஒரு நபருக்கு ரூ 2000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரூ 2000-த்தில் ரூ 300 விரைவு தரிசன டிக்கெட், போக்குவரத்து செலவு, 3 வேளை சைவ உணவு ஆகியனவும் அடங்கும்.

 திருச்சானூர் கோயிலுக்கும் அழைத்து செல்லப்படுவார்கள். ஆனால் திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்ய பக்தர்கள் தனியாக டிக்கெட் எடுத்துக் கொள்ள வேண்டும். அது இந்த திருப்பதி தொகுப்பில் வராது. இந்த திருப்பதி தொகுப்பில் வருவோர் கட்டாயம் ஆதார் கார்டு அசல், ஜெராக்ஸ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். 

திருப்பதியில் சுவாமி தரிசனத்தை பொறுத்தே திருச்சானூருக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இந்த டூர் பேக்கேஜில் திருப்பதி செல்ல விரும்புவோர் மேற்கண்ட தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் இணையதளத்தில் புக் செய்யலாம்.

Share this story