3 சிலிண்டர், ஸ்மார்ட்போன், பஸ் பயணம் இலவசம், கடன்கள் தள்ளுபடி : பிரியங்காவின் வாக்குறுதிகள்..

3 cylinder, smartphone, free bus travel, loan waiver Priyanka's promises .

403 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.  

கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 114 இடங்களில், வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

தீவிர பிரசாரம் :

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் முனைப்புடன் களம் இறங்கியிருக்கிறது.

இந்த முறை உத்தரபிரதேச தேர்தலில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

ஸ்மார்ட்போன், ஸ்கூட்டர் :

இந்த நிலையில், உத்தரபிரதேச மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை கடந்த மாத இறுதியில் பிரியங்கா காந்தி டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.  அதில், காங்கிரஸ் கட்சி உத்தர பிரதேசத்தில் அடுத்த அரசு அமைக்கும் பட்சத்தில், மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய அவரது பதிவில், சில பள்ளி மாணவிகளை சந்தித்தேன். படிப்பதற்கும் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஸ்மார்ட்போன்கள் தேவையாக உள்ளன என என்னிடம் கூறினார்கள்.

தேர்தல் அறிக்கை குழுவின் ஒப்புதலுடன் உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.  

அதன்படி, பள்ளிப் படிப்பு முடித்த மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்களும் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மின் ஸ்கூட்டர்களும் வழங்கப்படும் என மகிழ்ச்சியுடன் அறிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. 

மக்களின் ஆதரவை திரட்டுவதற்காகவும் கட்சியை வலுப்படுத்துவதற்காகவும் பிரதிக்யா யாத்திரை நடத்துகிறது. இந்த யாத்திரையின்போது, பா.ஜ.க. ஆட்சி மீது விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 

கடன்கள் தள்ளுபடி :

மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளும் வழங்கப்படுகின்றன.
அவற்றில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.32,000 கோடியை தவிர, விவசாய கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். எங்கள் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும். 

மீன் வளர்ப்புக்கு விவசாய அந்தஸ்து வழங்குவோம். நெல், கோதுமை ரூ.2,500க்கும், கரும்பு ரூ.400க்கும் எடுக்கப்படும். எங்கள் அரசு இளைஞர்களுக்கு 20 லட்சம் அரசு வேலைகளையும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலையையும் அளிக்கும். 

பெண்களுக்கு பஸ் பயணம் இலவசம், எந்த நோய் வந்தாலும், 10 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று பிரக்யா யாத்திரையில்
பிரியங்கா காந்தி கூறினார்.

40% ஒதுக்கீடு :

இதனைத் தொடர்ந்து பிரியங்கா டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், 'தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு காங்கிரசில் 40 சதவீத ஒதுக்கீடு, மாணவிகளுக்கு ஸ்கூட்டிகள், ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் கணவனை இழந்தோருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ. 1000, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 3 இலவச சிலிண்டர்கள் ஆகியவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
*

Share this story