கார்த்தி சிதம்பரம் வீட்டில், சிபிஐ மீண்டும் சோதனை..

cpi2

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது 250 சீனாகாரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 

2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விசாக்களில்தான் முறைகேடு அரங்கேறி இருப்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 

இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாகவே ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் கடந்த மே மாதம் சோதனை நடைபெற்றது. 

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். 

கார்த்தி சிதம்பரத்தின் பீரோவை 6 அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
*

Share this story