தடையை மீறி காங்கிரஸ் போராட்டம் : ராகுல், பிரியங்கா கைது
 

By 
rahul9

காங்கிரசின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

ஆனால், தடையை மீறி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டர்கள் சாலைகளில் அமர்ந்து தர்ணா செய்தனர்.

பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க சென்ற ராகுல்காந்தி கறுப்பு சட்டை அணிந்து இருந்தார். 

அதேபோல், காங்கிரஸ் எம்.பி.க்களும் கறுப்பு நிறத்திலான ஆடைகளை அணிந்து இருந்தனர். பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடந்தது. 

பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகையை நோக்கி ராகுல் காந்தி தலைமையில் பேரணியாக சென்றனர். 

அப்போது, காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பேரணிக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர். ஆனால் காங்கிரசார் முன்னேறி செல்ல முயன்றனர்.

இதையடுத்து, ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். 

அதேபோல், பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டார். அவர் போராட்டம் நடத்தியபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். 

இதனால், அவர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் பிரியாங்காந்தி மற்றும் காங்கிரசாரை கைது செய்தனர். 

இதற்கிடையே டெல்லி சாலைகளில் காங்கிரஸ் தொண்டர்கள் தர்ணா, மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
*

Share this story