சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் : சபாநாயகருடன் ஈபிஎஸ் தரப்பு சந்திப்பு
 

abbavu2

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் இருந்தனர். அப்போது, எதிர்க்கட்சி துணை தலைநராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பவும் அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

Share this story