நண்பர்களின் அரசாங்கம், நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை : ராகுல் விமர்சனம்

rahul and modi

வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கோல் இந்தியா மற்றும் எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் 2020 முதல் 2022 வரை வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதை விளக்கும் வரைபடத்தையும் தமது டுவிட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது: இளைஞர்களின் கனவுகள் உண்மைதான், ஆனால் ராஜா (மோடி) வின் வாக்குறுதிகள் பொய்யானவை, அவரது பேச்சுகள் வெற்றுத்தனமானது. நேர்மையுடனும் உழைத்திருந்தால் வேலை வாய்ப்பு பெருகுவதற்குப் பதிலாக எப்படி குறைந்திருக்கும்?

உத்தரபிரதேசத்தில் தேர்தல் முடிந்துவிட்டதால், இலவச ரேஷன் முடிந்துவிட்டது. இப்போது தகுதியான கார்டு வைத்திருப்பவர்களுக்கு உத்தரபிரதேசத்தில் இலவச ரேஷன் கிடைக்காது. இப்போது ஏழைகளுக்கு ஒரு கிலோ கோதுமை ரூ.2க்கும், ஒரு கிலோ அரிசி ரூ.3க்கும் அரசு ரேஷன் கடைகளில் இருந்து கிடைக்கும்.

பணவீக்கத்தால் போராடும் நடுத்தர மக்கள் எப்படியாவது தங்கள் செலவைக் குறைத்து வாழ்கிறார்கள், ஏழைகள் இப்போது இரண்டு வேளை சாப்பாட்டுக்கு கூட ஏங்குவார்கள்.

இலவச ரேஷன் மற்றும் நன்றி மோடிஜி என்ற பெரிய போஸ்டர்கள் மீண்டும் ஒருமுறை இதை நிரூபித்துள்ளன. நண்பர்களின் அரசாங்கம் (மத்திய அரசு) நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


 

Share this story