தரைப்பாடி போல, தலை காட்டிப் போனாலும் தலைவனாக முடியாது : எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சூடு

அதிமுக பொதுக்குழு தொடர்பாக நிகழும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள கவிக்கனல் வருமாறு :
* வழியெங்கும் நின்று
மக்கள் வரவேற்க..
விழி விரியும்
ஆர்வத்தால்
தொண்டர்கள்
ஆர்ப்பரிக்க..
* தன்னெழுச்சி
கொண்டு
தாய்மார்கள்
இளைஞர்கள்
வாழ்த்திசைக்க.
ஜனத்திரளில்
நீந்தி வந்து
முகில் பிளந்து
முகம் காட்டும்
முழு மதிபோல்
வலம் வந்து
வற்றாத
தமிழால்
உரை தந்து..
மக்களின்
நெஞ்சத்தை
கொய்பவனே
தலைவன்...
* அதற்கு
மாறாக..
திரும்பிப் போ
வராதே
எனும்
கருப்பு எழுத்து
சுவரொட்டிகள்
காரித்துப்ப..
காசுக்கு
திரட்டப்பட்ட
கூட்டம்
கடமைக்கு
கை தட்டி
கலைந்து போக...
* கூட்டத்தோடு
ஊருக்குள்
அயோக்கியன்
ஒருவன்
குற்ற உணர்வு
கொண்டவனாய்
குறுகுறுத்த
உள்ளத்தோடு
தரைப் பாடி
போல
தலை காட்டி
போனாலும்
அவன்
தலைவனாக
முடியாது...
அவனை
தமிழுலகம்
ஏற்காது..
-- இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*