கூவம் கரையோரம் வசித்த 178 குடும்பங்களுக்கு, புளியந்தோப்பில் புதிய வீடுகள்..
 

tamilnadu govt

சென்னை தீவுத்திடல் அருகே கூவம் கரையோரம் சத்தியவாணி முத்துநகரில் 2,092 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்களை அங்கிருந்து அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. 

இவர்களில் 1914 குடும்பத்தினருக்கு ஏற்கனவே பெரும்பாக்கம் பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி விட்டனர். 

மீதமுள்ள 178 குடும்பத்தினர் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அருகிலேயே வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர். 

இதைத்தொடர்ந்து, 178 குடும்பத்தினருக்கு புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதி-2 திட்டப்பகுதியில் வீடுகளை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். 

இதன்பேரில் அனைவருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
*

Share this story