தங்கத்தை தரம் பார்த்து சொல்கிற உரிமை, உரைகல்லுக்கு  மட்டுமே உண்டு : ஓபிஎஸ் தரப்பு சாட்டையடி 
 

marudhu78

நீ ஒரு விசுவாசம் இல்லாத மனிதப் பிழை, என்பதை கண்டு பிடித்துத் தான்,  உன்னை அம்மா ஆத்தூர் தொகுதிக்கு அடித்து விரட்டினார்கள் என்பதை கழகத் தொண்டர்கள் அறிவார்கள்' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு  :

தங்கத்தை தரம் பார்த்து சொல்கிற உரிமை உரைகல்லுக்கு  மட்டுமே உண்டு. நத்தம் விஸ்வநாதன் போன்ற துருப்பிடித்த தகரத்துக்கு அது கிடையாது. 

நீ ஒரு விசுவாசம் இல்லாத மனிதப் பிழை, என்பதை கண்டு பிடித்துத் தான்  உன்னை அம்மா ஆத்தூர் தொகுதிக்கு அடித்து விரட்டினார்கள்  என்பதை கழகத் தொண்டர்கள் அறிவார்கள்.

எனவே,  பழைய புளியம்பழ வியாபாரியும்  அதானியின் புதிய வர்த்தகப் பங்காளியுமான 'நாத்தம்' விஸ்வதான் கொடநாடு குற்றவாளிக்காக, கம்பு சுத்துவதை நிறுத்திக் கொள்வது நல்லது. 

* ஆள் பார்த்து,  அறிவு பார்த்து.. அம்சம் பார்த்து..  
குணம் பார்த்து மனம்  பார்த்து.. 
தகுதி பார்த்து தரம் பார்த்து.. 

தராதரம்  பார்த்து வருவது தான், தலைமைப்  பண்பு  என்றால் .. அது அம்மா காட்டிய அடையாளம். ஐயாஓ.பி.எஸ்  ஒருவருக்கே சமகாலப் பட்டியலில் சாலப் பொருத்தம்.. 

அதனை, சாத்தியமாக்கி  முடிப்பது தான் தொண்டரது போக விருப்பம்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்

Share this story