அரசியல் சதுரங்கம் : வாக்குகளை வீணடித்து விடாதீர்கள் - கெஜ்ரிவால் வேண்டுகோள்
 

delhi4

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 

டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த தேர்தலில், வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இங்கு 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றி பெற துடிக்கிறது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. 

இதில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் களமிறங்குகிறது. எனவே தேர்தல் களத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 

குஜராத் சட்டசபைத் தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், குஜராத் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வாக்குகளை வீணடித்து விட வேண்டாம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், 'குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு சவால் அளிக்கும் கட்சியாக ஆம் ஆத்மியே இருக்கும். இந்த இரு கட்சிகளுக்கும் இடையேதான் நேரடி போட்டி இருக்கப்போகிறது. எனவே, காங்கிரசுக்கு வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வீணடித்து விடாதீர்கள் என தெரிவித்தார்.

Share this story