தமிழக அரசுக்கு, ராஜபச்சே நன்றி..

rajap

இலங்கை மக்களுக்கு அரிசி, பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, அந்நாட்டு மக்களுக்கு அரிசி, பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். 

அதன்படி, பொருட்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்ததற்காக தமிழக முதல்வருக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். 

அதில், இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களுக்கும், தமிழக அரசுக்கும், இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாக கூறி உள்ளார். 
*

Share this story