காத்திரு பகையே, நிறம் மாறப் போகுது களம் : ஓபிஎஸ் தரப்பு 'கெத்து'

சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேவர் தங்க கவச விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, அது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சிலர் நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாக தெரிகிறது. எனவே, அதை பற்றி கருத்து சொல்ல விருப்பம் இல்லை. ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்? என்று நாட்டு மக்களுக்கு தெரியும்.
தொண்டர்களுக்கு என்னை பற்றி தெரியும். பாவத்தை அவர்கள் செய்துவிட்டு, பழியை என் மீது போடுகிறார்கள். அ.தி.மு.க. உறுதியாக இணைய வேண்டும் என்பதே என் நோக்கம்' என்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்தியில்,
"எடப்பாடி பழனிசாமியின் சுயரூபம் இதுதான் மக்களே., புரிந்து கொள்க: என தீர்மானமாய் வெளியிட்டுள்ள கவிதைக் குறிப்புகள் வருமாறு :
பார்க்கச்
சகிக்காத
முகம்...
கேட்கப்
பிடிக்காத
குரல்...
தலைமைப்
பண்பற்ற
தரம்...
திறமை
ஏதுமில்லா
குணம்..
வசீகரம்
இல்லாத
வடம்..
வாஞ்சை
அறவே இல்லாத
ஜடம்...
ஆற்றல்
ஏதுமில்லா
மடம்..
அரவணைக்க
தெரியாத
விடம்..
ஒற்றுமை
விரும்பாத
மனம்..
ஒற்றைத்
தலைமைக்கு
ஒவ்வாத
கணம்..
பத்துப்
பொருத்தமும்
மொத்தமும்
இல்லாத
குத்துக் கோல்
கூமுட்டையிடம்
குவிந்து
கிடப்பதெல்லாம்
கத்தை
கத்தையாய்
பணம்..
பணம்..
பணம்...
அதற்கு
காவடி
தூக்கலாம்
காசுக்கு
அலையும்
சில பிணம்..
ஆனால்
தரைப்பாடியின்
தரங்கெட்ட
அரசியலை
ஒருபோதும்
ஏற்காது
தமிழ்நாட்டு
ஜனம்..
ஆம்...
ஒரு ஹீரோ
தொடங்கி
ஒரு
ஹீரோயின்
வழி நடத்திய
ஒப்பற்ற
கட்சிக்கு
எடப்பாடி
கோமாளி
என்றுமே
ஒவ்வாமை
ஜுரம்..
எங்கள்
அம்மா
அடையாளம்
காட்டிய
கழகத்து
பரதனே
காலம்
கொடுத்த
வரம்...
காத்திரு
பகையே
நிறம் மாற
போகுது
களம்..!
இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகு தெரிவித்துள்ளார்.
*