அரசியல் கலந்த நகைச்சுவை உணர்வு பாரீர்.! - இயக்குனர் எழிலுடன் பி.சி. அன்பழகன்..

By 
pca9

இலக்கை நோக்கிய பயணத்தில் தடைகள் நேரலாம். அதைக் கடந்து வெல்வது தானே வரலாறு. இது அரசியல்- சினிமா எனும் இரு துறைகளுக்கும் மிகப் பொருந்தும் தானே.!

இந்நிலையில், துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் எழில். கடந்த 2013 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் விமல், பிந்து மாதவி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'தேசிங்கு ராஜா' பெரிய வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த படத்தின் இரண்டாம் பாகமாக, தேசிங்கு ராஜா-2 என்ற பெயரில் உருவாகி திரைக்கு வருகிறது. இந்தப் படத்திலும் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகிகளாக பூஜிதா, ஹர்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். 

அரசியல் கலந்து நகைச்சுவை உணர்வுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், முதலமைச்சர் கேரக்டரில் இயக்குனர் ஆர்.வி் உதயகுமார், அமைச்சர்கள் கதாபாத்திரத்தில் நாஞ்சில் பி.சி. அன்பழகன், ரவி மரியா, சிபி மற்றும் சிங்கம் புலி, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். 

வித்யாசாகர் இசையமைத்துள்ளார். செல்வா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விரைவில் திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து, காமராசு, அய்யா வழி போன்ற திரைப்படங்களை இயக்கிய பி.சி. அன்பழகன் தெரிவித்ததாவது: 

இயக்குனர் எழில், என் நல்ல நண்பர்; மிகச் சிறந்த சகோதரர். அமைச்சர் கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்வு செய்திருக்கிறார். தென் மாவட்ட பேச்சு வழக்கில் வசனம் பேச அனுமதித்திருக்கிறார். குறிப்பாக, என் இயல்பான உடையான வெள்ளை சர்ட் - பேன்ட்டில்  இயல்பாக நடிக்க அனுமதி அளித்தமைக்கும் என் நண்பர்  இயக்குனர் எழில் என்றும் வணக்கத்திற்குரியவர். படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. நிச்சயம் அனைவரும் ரசித்து மகிழ்வர்' என்றார்.

Share this story