'டவுன்லோடு இயக்குனர்' மிஷ்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பி.சி.அன்பழகன் வலியுறுத்தல்..

By 
pca5

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் முரளி நடித்த படம் 'காமராசு'. இப்படத்தை இயக்கியவர் பி.சி.அன்பழகன். இதனைத் தொடர்ந்து, 'அய்யாவழி' எனும் அறநெறி உணர்த்தும் படத்தையும் இயக்கினார்.

இந்நிலையில்,  கன்னியாகுமரியில் தனது அரசியல் மற்றும் கல்வி சார்ந்த சமூக பயணத்தில் இருந்த பி.சி. அன்பழகன்.. , இயக்குனர் மிஷ்கின் குறித்த சர்ச்சையான பேச்சுக்கு, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

'மிஷ்கின் ஒரு டவுன்லோடு இயக்குநர்'. மலையாள சினிமா மற்றும் தமிழ் சினிமாவின் பிதாமகன்களாக திகழ்ந்த ஜே.சி.டேனியல் என்.எஸ்.கிருஷ்ணன், கே.வி. மகாதேவன் உள்ளிட்ட என யாரும் தங்களை ஜாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ அடையாளம் காண்பித்தது இல்லை. 

ஆனால், தற்போது தமிழ் சினிமாவில் ஜாதி, மதம் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழில் பிரபலமாக இருந்த நடிகை ஒருவரை இழிவாகப் பேசி திரைப்பட இயக்குனர் மிஷ்கின் பேசியுள்ளார். 

மேலும், 'கோயிலுக்கு செல்லாவிட்டாலும் பரவாயில்லை; தியேட்டர்களுக்கு வாருங்கள்' என இந்து மதத்தை சுட்டிக்காட்டி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில், திறமையான இயக்குநர்களாக இருந்து வரும் மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் அதிகமாக பேசுவதில்லை. சினிமாவில் வெற்றியை மட்டுமே இவர்கள் சிந்திப்பதால், இன்றைக்கும் ஜொலித்து வருகின்றனர். இவர்கள், தங்கள் திறமையால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில், இந்து மதத்தை சுட்டிக்காட்டி அவதூறாக பேசியுள்ள இந்த டவுன்லோடு இயக்குனர் மிஷ்கின் மீது சினிமாத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'  என வலியுறுத்தினார் பி.சி.அன்பழகன்.
 

Share this story