ஓ.பன்னீர்செல்வம் எடுத்த அதிரடி நடவடிக்கை ; அன்புமணி ராமதாஸ் விடுத்த கடும் கண்டனம்..

opsr

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

* தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி. திருப்பி அனுப்பியிருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு இல்லை என்று கவர்னர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளனர். கவர்னர் அவ்வாறு கூறியது உண்மை என்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது' பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

 

Share this story