தொண்டர்களுக்கு நடிகர் விஜய் திடீர் உத்தரவு..

By 
vbirth

நடிகர் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளார். இதற்காக இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அவ்வப்போது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களையும், கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறார். 

இந்தநிலையில் நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி அதாவது நாளை கொண்டாடப்படவுள்ளது. அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு நடைபெறும் முதல் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சி தொண்டர்கள் கொண்டாட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இந்தநிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் விஜய்  அவர்கள் உத்தரவு! தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 

எனவே, தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். என அக்கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். 

 

 

Share this story