நடிகர் விஜய் அரசியல் பிரவேசம்; நிர்வாகிகளுடன் ஆலோசனை..

விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார். சமீபத்தில், நடிகர் விஜய் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.
மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என கூறினார். மேலும், விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகிறார். இதனால், நடிகர் விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்குகிறார் என்ற வெளிப்படையாக அறிவிக்கப்படாத தகவல் வலம் வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக வந்தார். இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையுடன் வரும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்டுகிறது.
இந்த கூட்டத்தில் 300 பேர் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆலோசனை கூட்டத்திற்கு புது கெட்டப்பில் விஜய் வந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.