இதற்கெல்லாம் உரிய பதில் விரைவில் எடப்பாடிக்கு கிடைக்கும் : ஓபிஎஸ் தரப்பு உறுதி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
ஜூலை இரண்டாம் வாரத்தில் மத்திய அமைச்சரவையில், சில இறுதி மாற்றங்கள் நடைபெற இருப்பதாகவும் அதில் ஓ.பி.ரவீந்திரநாத் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு உறுதி எனும் நம்பத்தகுந்த செய்திகள் உலா வந்தன.
இது நடந்து விட்டால் அது அபகரிப்பு எடப்பாடிக்கும், அவர் மதுரையில் நடத்த உள்ள துரோக மாநாட்டுக்கும் பேரிடியாக மாறிவிடும் என்னும் பதட்டம் தரைப்பாடி கம்பெனி தரப்பில் ஏற்பட்டது.
அப்புறம் என்ன.. வழக்கம் போல எடப்பாடிக்கு நீதிமன்றத்தின் மூலமாக ஆறுதல் கிடைத்துள்ளது.
ஆனாலும் மிஸ்டர் எடப்பாடி இதற்கெல்லாம் உரிய பதில் உங்களுக்கும் உங்களின் துரோக கும்பலுக்கும் விரைவில் கிடைக்க காத்திருக்கிறது.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.