தமிழ்நாடு மின்சார வாரியத்தை அதிமுக சீரழித்துவிட்டது : முதலமைச்சர்  ஸ்டாலின்

AIADMK has corrupted the Tamil Nadu Electricity Board Chief Minister Stalin

திருவாரூரில், முதல் சூரிய சக்தி மின் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது :

* திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில், ஒரு லட்சம் மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன.

* புதிய மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள், மின்சாரத்தை தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

* சூரிய சக்தி மின் உற்பத்திக்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்க உள்ளது.

* திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

* தமிழ்நாடு மின்வாரியத்தை அதிமுக ஆட்சியாளர்கள் முறையாக பராமரிக்கவில்லை. 

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியாளர்கள் தமிழ்நாடு மின்வாரியத்தை  சீரழித்து விட்டனர்.

* அதிமுக ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே தரப்பட்டன' என்றார்.

Share this story