அதிமுக. முன்னாள் அமைச்சரை கைது செய்ய, சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு

raje

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது ஜாமின் நிபந்தனைகளை முழுமையாக தளர்த்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் விசாரணை நடந்தபோது, தமிழக அரசு சார்பில் இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்து வருவதாகவும், எனவே அந்த விசாரணை முடிய 6 மாதம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும். 6 மாதம் வரை ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதற்கான தடையை நீட்டிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ராஜேந்திர பாலாஜி வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் உயர்நீதிமன்றத்தை அணுகி உரிய உத்தரவை பெறும்படியும் உத்தரவிடப்பட்டது.

Share this story