'விவசாயிகளின் நண்பன்' பிரதமர் மோடிக்கு, அதிமுக சார்பில் நன்றி : ஓபிஎஸ்

By 
AIADMK thanks 'Prime Minister Modi', 'friend of farmers' OBS

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு உயரும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில், 

2020-ம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், 2020-ம் ஆண்டு விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் மற்றும் 2020-ம் ஆண்டு விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் சேவைகள் சட்டம் என 3 சட்டங்கள் சென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டன.

நண்பன் :

இருப்பினும், இந்த 3 சட்டங்கள் மூலம், விளைபொருட்களில் பெரும் வணிக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் என்றும், விவசாயிகளின் நிலங்கள் பறிபோய்விடும் என்ற அச்சம் விவசாயிகளிடத்தில் இருக்கிறது என்றும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்றும் தெரிவித்து ஓராண்டிற்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், மேற்படி சட்டங்களில் உள்ள பயன்களை விவசாயிகளின் ஒரு பிரிவினரிடம் புரிய வைக்க முடியவில்லை என்று தெரிவித்து மேற்படி சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும், விவசாயிகளின்பால் அவருக்கு உள்ள அக்கறையும் வெளிபடுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் நண்பன் என்பது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

நன்றி :

பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதற்காக அ.தி.மு.க.வின் சார்பில் பிரதமருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்' என அதில் கூறியுள்ளார்.
*

Share this story