'2000 ஏக்கரில் விமான நிலையம்' என்பது வெற்று அறிவிப்பு : வழக்கறிஞர் எம்.ஜி.ஆர். நகர் கே.புகழேந்தி விமர்சனம்..

By 
mgrp5

'மத்திய அரசின் மேல் பொய்ப் பழியை சுமத்த, தற்போது 2000 ஏக்கரில் ஓசூரில் விமான நிலையம் அமைக்கப் போவதாக, சட்டப்பேரவையில் திமுக அரசு வெற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது' என வழக்கறிஞர் சென்னை-எம்.ஜி.ஆர்.நகர் கே.புகழேந்தி விளக்கியுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

'தமிழக அரசு ஓசூர் மாநகராட்சியில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசிடன் கோரிக்கை வைத்து, அதற்கு, அப்போதைய விமானத்துறை அமைச்சர் இவர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளார். 

பெங்களூருவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கும்போதே, பெங்களுரு விமான நிலையத்தில் இருந்து 150  கிலோ மீட்டர் தூரத்திற்கு 15 வருடத்திற்கு எந்த விமான நிலையமும் காட்டக்கூடாது என்று மத்திய அரசின் விமானத் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. 

இவையெல்லாம் தெரியாமல்..? தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி, பிறகு மத்திய அரசின் மேல் பொய்ப் பழியை சுமத்த, தற்போது 2000 ஏக்கரில் ஓசூரில் விமான நிலையம் அமைக்கப் போவதாக, வெறும் வெற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். 

இன்று, தமிழ்நாட்டில் உள்ளாட்சியே செயல் இழந்து, அனைத்துச் சாலைகளும் தெருக்களும் குண்டும் குழியுமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயல் இழந்து இருக்கிறது. இதைச் சரி செய்தாலே, மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். 

இந்த அவல நிலை குறித்து, தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலம் கருதி, அண்ணாமலை அவர்கள்; தமிழக முதல்வரின் நடத்த முடியாத வெற்று அறிக்கையை தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார்.    

தெலுங்கானாவில் 6 மாதத்திற்கு முன் நடந்த சட்டசபைத் தேர்தலில், 18 சதவீதம் ஓட்டு வாங்கிய பிஜேபி, தற்போது நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 34% ஆக உயர்ந்து, 8 தொகுதிகளை வெற்றி பெற்றுள்ளது. 

இதேபோல், 18.5% உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அண்ணாமலை தலைமையில், 2026 இல் தமிழ் நாட்டில் வெற்றி பெற்று மாபெரும் மாற்றம் நிகழும். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நிச்சயம் வரும். ஜெய் ஹிந்த்.! ' என வழக்கறிஞர் எம்.ஜி.ஆர்.நகர் கே.புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.

Share this story