தமிழகம் முழுவதும், இன்று வருமான வரித்துறை அதிரடி சோதனை..

tax2

* தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான காரணம் வெளியாகவில்லை. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

* பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த வக்கீல் ஜெய் சுகின் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

 

Share this story