'கூட்டணியை கூட ஒருங்கிணைக்கவே முடியாதவர்கள் எல்லாம்' : ஓபிஎஸ் கேள்வி 

By 
opsji

ஒரு சில காட்சிகள் உள்ள கூட்டணியை கூட ஒருங்கிணைக்க முடியாதவர்கள், எப்படி இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும் என இந்தியா கூட்டணி குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.  

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்கள் என்றும்,

அவர்களால் ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கும் சக்தி கூட இல்லை என்றும் அவர்கள் எப்படி நாட்டை ஒருங்கிணைத்து ஆள தகுதி தகுதியுடன் இருப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம் என்றும் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Share this story