தரைப்பாடிக்கு தயாராகி விட்டது ஆப்பு : மருது அழகுராஜ் திட்டவட்டம் 

By 
epssasi

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :

* கொடநாடு கொலை கொள்ளை குறித்து ஓ.பி.எஸ்.ஸின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருந்து, பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பவே.. 

கிணறு வெட்டியதற்கான ரசீது தன்னிடம் இருப்பதாக வடிவேலு செய்யும் நகைச்சுவையை தான் எடப்பாடி தரப்பு இன்றைக்கு செய்திருக்கிறது.

பத்து நாளைக்கு ஒரு தடவை எடப்பாடி., அண்ணா திமுகவுக்கு அதிபராகி விட்டார் என்று புரளி கிளப்புவதையே பிழைப்பாக கொண்டிருக்கிறது எடப்பாடியின் பைனான்ஸ் கம்பெனி.

ஆனால், ஒருபோதும் அதிமுகவுக்கு  எடப்பாடியால் பொதுச்செயலாளர் ஆக முடியாது. காரணம், புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் அமர்ந்த அந்த இருக்கை,

ஒன்றரைக் கோடி தொண்டர்களால் அலங்கரிப்படுவதே அன்றி, சம்பந்தியை கொண்டு எடுக்கப்படுகிற டெண்டர் அல்ல. இதனை வருங்காலம், பதவிப்பித்துப் பிடித்து அலையும் பழனிக்கு சத்தியமாய் உணர்த்தும்.

* சசிகலா, தினகரன். ஓ.பி.எஸ். என்னும் வரிசையில் எடப்பாடியின் அடுத்த துரோக.. தன் அரசியல் அபகரிப்புக்கு பல வகைகளிலும் உதவிய பா.ஜ.க. வுக்கு தான் என்று பலரும் பந்தயமே கட்டத்தொடங்கி விட்ட நிலையில்..

எடப்பாடியின் பத்தினித்தனத்தை சோதிக்கவே  கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு எடப்பாடிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது பா.ஜ.க. தலைமை.

ஓ.பி.எஸ்ஸை கூப்பிட்டதால் நாங்கள் கலந்துகொள்ளவில்லை என எடப்பாடி உப்புமா காரணம் சொல்ல வாய்ப்பு கொடுக்க கூடாது என்பதற்காகவே, ஓ.பி.எஸ் டி.டி.வி. உள்ளிட்டோரை பா.ஜ.க.  அழைக்காமல் இருக்கலாம்.

அதே வேளையில், ஓ.பி.எஸ். தான் நம்பிக்கைக்குரிய தலைவர் என்பதில் பா.ஜ.க. தலைமை உறுதியோடு இருக்கிறது. எடப்பாடி குறித்து உறுதியான இறுதியான முடிவை தாமரை தரப்பு எடுக்க முடிவெடுத்து விட்டது.

ஷிண்டேக்களும் அஜித்பவார்களும் ஆயத்தமாக இருக்க, தரைப்பாடிக்கு தயாராகி விட்டது ஆப்பு, அதற்கான முடிவை எடுக்கவே இந்த அழைப்பு.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story