நீ வருவாய் என-2 : இராஜகுமாரன் - தேவயானி தம்பதிகளின் தோட்டத்தில், பி.சி.அன்பழகன்..

By 
pca10

ஈரோடு மாவட்டம், வெற்றிலைக்கு பெயர் பெற்ற அந்தியூர் - எண்ணம் பாளையத்தில் (பர்கூர் வனம், மணியாச்சி பள்ளத்தில்) இயக்குனர் இராஜகுமாரன் - தேவயானி தம்பதிகளின் தோட்டத்தில்,

இயக்குனர் இராஜகுமாரன் இயக்கும் 'நீ வருவாய் என' படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை - விவாதத்தில் திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் கலந்து கொண்டுள்ளார். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

காமராசு, அய்யா வழி போன்ற படங்களை இயக்கியவர் பி.சி.அன்பழகன். இவர் ஏற்கனவே 'துள்ளாத மனமும் துள்ளும்', பூவெல்லாம் உன் வாசம் படங்களின் இயக்குனர் எழில் இயக்கத்தில், தேசிங்கு ராஜா - 2 படத்தில் அரசியல்வாதியாக, தென் மாவட்ட பாஷையில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, எழில், இராஜகுமாரன், அன்பழகன் மூவரும் 'சூப்பர் குட் பிலிம்ஸ்' தயாரிப்பாளர்  ஆர்.பி.செளத்ரி அவர்களால் இயக்குனராக அறிமுகமான இனிய நண்பர்கள் ஆவர்.

Share this story