உங்களால், உங்கள் தாயாருக்கு கவலை அளிக்கிறது : ராகுலுக்கு, லாலு அறிவுரை

By 
lalu2

பாட்னாவில், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தபோது, ராஷ்டிரிய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் பேட்டி அளித்தார். பிரதமர் மோடியை எதிர்கொள்ள, தான் உடல்தகுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.

பின்னர், தனக்கே உரிய பாணியில், 53 வயதான ராகுல்காந்தியிடம் நகைச்சுவையாக பேசினார். அவர் கூறியதாவது:-

திருமணம் செய்து கொள்ளுமாறு உங்களிடம் (ராகுல்) ஏற்கனவே கூறியிருக்கிறேன். ஆனால், என் அறிவுரையை நீங்கள் கேட்பது இல்லை. நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதது, உங்கள் தாயாருக்கும் (சோனியாகாந்தி) கவலை அளிக்கிறது. இன்னும் காலம் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் திருமண ஊர்வலத்தில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறோம். நீங்கள் அணிந்துள்ள அரைக்கை சட்டை நன்றாக இருக்கிறது. மோடியின் குர்தாவுக்கு சரியான போட்டியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

லாலு சொன்னதை கேட்டு, இதர தலைவர்கள் உரக்க சிரித்து மகிழ்ந்தனர். வெட்கம் கலந்த புன்னகையுடன் லாலுவை பார்த்த ராகுல்காந்தி, ''நீங்களே சொல்லி விட்டதால், அது நடக்கும்'' என்று கூறினார்.
 

Share this story