நெற்றியில் வழியும் ரத்தம்.. பயங்கர விபத்தில் சிக்கிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி..

By 
mamataji

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு ஏற்பட்ட  விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் இப்போது நடந்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் வெளியிட்ட தங்களது "எக்ஸ்" பக்க பதிவில்,

தங்கள் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு இன்று(14-ந்தேதி) பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும் நெற்றியில் பட்ட காயத்தில் அவருக்கு ரத்தம் வழியும் புகைப்படங்களையும் அனைத்து இந்திய திரிணாமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. தற்போது அவர் கொல்கத்தாவில் அரசு நடத்தி வரும் SSKM என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை. 

Share this story