'முடியாது என்பது மூடன் கணக்கு; முடியும் தோழா வீரனே உனக்கு' - நாஞ்சில் பி.சி. அன்பழகன்.. 

By 
pca8

'முடியாது என்பது மூடன் கணக்கு;  முடியும் தோழா வீரனே உனக்கு' என்பது போல, போராடினால் உண்டு பொற்காலம் தானே..!

ஆம், இன்றைய எந்திர உலக பரபரப்பான அரசியல் மற்றும் சினிமா சூழல் யாவரும் அறிந்ததே.

முன்னதாக , 'துள்ளாத மனமும் துள்ளும்'  'தீபாவளி' போன்ற படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குனர் எழில் அவர்களின் இயக்கத்தில் விரைவில் வெளிவரும் திரைப்படம் தேசிங்கு ராஜா-2.

(அரசியலை மையமாகக் கொண்ட..?) இத்திரைப்படத்தில், தனித்துவமாக காட்சியளித்திருக்கிறார் பி.சி.அன்பழகன்.

இவர், காமராசு, அய்யா வழி, போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிமுக.வில் தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்; சிறந்த கட்டுரையாளர், எழுத்தாளர்.!

தேசிங்கு ராஜா-2 திரைப்பட டப்பிங் முடிந்து, வெளிவர இருக்கும் நிலையில், நாஞ்சில் பி்.சி. அன்பழகன் அவர்கள், திரைப்படம் குறித்து குறிப்பிட்டதாவது:

'என் நண்பர் எழில், மேலும் மிகச் சிறந்த சகோதரர். அவருடைய தேசிங்கு ராஜா-2 ஸ்கிரிப்டுக்கு ஒரு கேரக்டர் தேவைப்பட்டிருக்கிறது. என்னைத் தேர்வு செய்திருக்கிறார். அனைவரும் அர்ப்பணிப்பாய் உழைத்திருக்கிறோம். படம், மிக நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் அவசியம் பாருங்கள்' என்றார் சுருக்கமாக  நாஞ்சில் பி.சி. அன்பழகன்.

Share this story