மோடியை பற்றி கொச்சையான பேச்சு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு..

By 
anitha

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டு பத்து கிராமத்தில் கடந்த 22ம் தேதி இரவு நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், பிரதமர் மோடியை ஆபாச வார்த்தையால் விமர்சித்தார். 

இதை அடுத்து இவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 294/B (பிறருக்கு தொல்லை தரும் வகையில், பொது இடத்தில எந்த ஆபாசச் செயலைப் புரிந்தாலும், அல்லது ஆபாசமான ஒரு பாடலைப் பாடினாலும் வாசகத்தை உச்சரித்தாலும் சொன்னாலும்; இந்த குற்றத்திற்கு 3 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this story