முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை உறுதி செய்ய வேண்டும் : டிடிவி. தினகரன்

By 
ttvd44

* பால் திருட்டு, முறைகேடு என ஒட்டுமொத்த ஆவின் நிர்வாகமும் சீர்குலைந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது நிலவும் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு என்பது பொதுமக்கள் தனியார் நிறுவன பாலை நாடிச் செல்லும் சூழலை உருவாக்கியுள்ளதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டுகளை எவ்வித தட்டுப்பாடின்றி விநியோகம் செய்வதோடு, லாப நோக்கம் பார்க்காமல் பால் உற்பத்தியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இணைப்பு பாலமாக ஆவின் நிர்வாகம் செயல்படுவதை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

* பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வந்தார். இதனிடையே தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசுவதற்காக அண்ணாமலை டெல்லி சென்றார்.

இதன் காரணமாக இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த 'என் மண், என் மக்கள்' 3-ம் கட்ட நடைபயணம், நாளை மறுநாள்(6-ந்தேதி) தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அண்ணாமலையின் நடைபயணம் வரும் 16-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

Share this story