கமலாலயத்தில் மாட்டிறைச்சி சமைத்து வையுங்கள் அது தான் பிடிக்கும்; அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி

By 
evkss

காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் பா ராமச்சந்திரனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈ வி கே இளங்கோவன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தமிழர்கள் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால் வரும் 10 நபர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், எப்போது, எத்தனை பேர் வருவார்கள் என்ற விவரத்தை மாநிலத் தலைவர் முறைப்படி அறிவிப்பார்.

அதற்கு முன்பாக அண்ணாமலைக்கு நான் ஒரு வெண்டுகோள் வைக்கிறேன். சாப்பாடு செய்யும்போது மாட்டிறைச்சி செய்யுங்கள். நாங்கள் விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம். நீங்கள் திமுக, காங்கிரஸ் மீது இட்டு கட்டி தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததாக புத்தகத்தைத் தாருங்கள். நாங்கள் வாங்கிக்கொள்கிறோம். நாங்கள் மோடி சொந்த குடும்பத்துக்கே செய்த துரோக புத்தகத்தை தருகிறோம். அதையும் நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.

Share this story