டைரக்டர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட் : கோர்ட் உத்தரவு

By 
rks2

கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அருண் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தனர்.

அதில் பிரபல பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதனால் இவர்கள் இருவருக்கும் எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அவர் மறைவிற்கு பிறகு போத்ராவின் மகன் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கின் விசாரணைக்காக இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆஜராகவில்லை. அதுமட்டுமல்லாமல் அவரின் சார்பில் வழக்கறிஞரும் ஆஜராகாததால் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.
 

Share this story