நீதிமன்ற நிஜம்: ஓபிஎஸ் தரப்பு தெளிவுரை..

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
திருமதி சசிகலா அவர்கள் தொடர்ந்த சிவில் மேல் முறையீட்டு வழக்கில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சார்பாக வைக்கப்பட்ட வாதம் என்னவென்றால்..
கடந்த 12.9.2017 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் புரட்சித்தலைவி அம்மா அவர்களே நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும்,
கழகத்தை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அந்த பொதுக்குழுவில் உருவாக்கப்பட்டது என்றும்.
அன்று முதல் இன்று வரை கழக ஒருங்கிணைப்பாளர் என்ற நிலை தொடர்ந்து வருகிறது என்று வாதிடப்பட்டது,
திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தரப்பில் தான் முரண்பட்ட வாதம் வைக்கப்பட்ட..
நிரந்தர பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி அம்மா என்பதை நீக்கி விட்டோம்;
பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெற்று திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுச் செயலாளராக தேர்வாகிவிட்டார் என வாதிட்டனர்.
அந்த வழக்கு மனுவில், திருமதி. சசிகலா நீக்கப்பட்டார் என்ற விஷயம் பற்றி வினா எழுப்பப்படவில்லை,
கழக ஒருங்கிணைப்பாளர் தரப்பில் நீக்கப்பட்டது சரி என்று வாதிடப்படவுமில்லை.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.