நவம்பர் 9-ந்தேதி ஆர்ப்பாட்டம் : அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு
*

Demonstration on November 9 AIADMK Coordinators Announcement

முல்லை பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி, 5 மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 9 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையில், நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி, 5 மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 9- ஆம் தேதி அதிமுக சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

142- அடி வரை நீர் தேக்கப்படாமல் கேரளாவின் நிர்ப்பந்தத்தின் காரணமாக, நீர் இருப்பை தமிழக அரசு குறைத்துள்ளது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
*

Share this story